கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தென்னாப்பிரிக்காவில் தற்போது நடந்து வருகிறது. இதில் தென்னாப்பிக்கா – இங்கிலாந்து அணிகள் பங்கேற்கின்றன.

முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா வென்றது. தற்போது இரண்டாவது டெஸ்ட் துவங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து. ஆனால், அந்த அணி நினைத்தது நடக்கவில்லை.

அணியின் எந்த வீரராலும் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. போப் மட்டுமே 56 ரன்களை அடித்தார். ஸ்டேக்ஸ் 47 ரன்களை அடிக்க, சிப்லி, டென்லி உள்ளிட்ட 3 வீரர்கள் தலா 30+ ரன்களை தங்கள் பங்கிற்கு சேர்த்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஃபிலாண்டர், ரபாடா, நார்ட்ஜே மற்றும் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.