சியோல்
தென்கொரிய அதிபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்கொரியாவில் அதிபர் யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் கடந்த வாரம் அறிவித்தார்.
அதிபரின் இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவசர நிலை கைவிடப்பட்டது. ஆயினும் அவசர நிலையை செயல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக கோரி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தால் நாட்டு மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
அவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன் அவசர நிலை பரிந்துரை செய்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.இதையொட்டி யூன் சுக்-இயோல் தப்பிச் செல்லாமல் இருக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அவருக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.