இந்த முறை கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது.

பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் குவிந்தன. அதிலிருந்து இறுதிப்பட்டியலை ஆஸ்கர் குழுவினர் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டனர்.

வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தற்போது இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகவில்லை. ஆனாலும், ஓடிடியில் வெளியாகி ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட, முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.