இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படம் கடந்த வருடம் ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரானது.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியில் உருவாகும் ‘சூரரைப்போற்று’ படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். இதனை சூர்யா தனது 2டி பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

பிறருக்கு உத்வேகத்தை தரும் கேப்டன் கோபிநாத்தின் கதையை இந்தியில், அபண்டன்ஷியா என்டெர்டெய்ன்மெண்டுடன் இணைந்து தயாரிப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது என சூர்யா கூறியுள்ளார் .

[youtube-feed feed=1]