புதுச்சேரி

புதுச்சேரியில் விரைவில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்க உள்ளதாக முதல்வர் ரஙக்சாமி அறிவித்துள்ளார்.

நேற்று புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி,

“புதுச்சேரியில் காமராஜர் பெயரில் கல்வீடு கற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி 90% மக்களுக்கு கல்வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்காக சிறப்பு கூறு நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி இடம் என்ற  ஒரு உறுதியான நிலைப்பாட்டுடன் அரசு செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது அரசு துறையில்  இதுவரை 5 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்.தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில், அனைவருக்கும் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.