டில்லி

னி தனி நபர் ஒருவர் ஒரு துப்பாக்கி மட்டுமே வைத்துக் கொள்ள முடியும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

நாட்டில் பலர் உரிமம் இன்றி கள்ளத் துப்பாக்கிகள் வைத்துள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  அது மட்டுமின்றி ஒரு சிலர் ராணுவம் மற்றும் காவல்துறையினர் இடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகளையும் சட்டவிரோதமாக வைத்துள்ளனர்.   இதைத் தடுக்க அரசு முடிவு செய்துள்ளது.   எனவே தற்போதுள்ள சட்டம் திருத்தப்பட்டு புதிய சட்டம் ஒன்று விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

இப்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி ஒருவர் 3 துப்பாக்கிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.   இந்த புதிய சட்டத்தின்படி அது ஒரு துப்பாக்கியாக குறைக்கப்பட உள்ளது.   அத்துடன் தற்போது மூன்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் ஒரு துப்பாக்கியை மட்டும் வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ராணுவம் அல்லது காவல்துறையிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கிகள் வைத்திருப்போர், கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர், துப்பாக்கிகளைத் தவறாக உபயோகிப்போர், ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட உள்ளது.  கள்ளத் துப்பாக்கிகள் தயாரித்தல், விற்பனை, மற்றும் அழுது பார்த்தல் ஆகிய குற்றங்களுக்கு குறைந்தது 14 வருடச் சிறை தண்டனை முதல் அதிக பட்சமாக மரண தண்டனை வரை விதிக்கப்பட உள்ளது.

நடந்து முடிந்த இரு ஆண்டுகளில் தேசிய மற்றும் சர்வதேசத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க மத்திய அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்கள் 3 துப்பாக்கிகளை வைத்திருக்கலாம்.  ஆனால் அவை போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.