
சென்னை
கோயம்புத்தூரில் விரைவில் மெட்ரோ ரெயில் விடப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
இன்று தமிழக சட்டசபையில், விரைவில் கோயம்புத்தூரில் மெட்ரோ ரெயில் விடப்படும் என்னும் தகவலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், ”சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட விரிவுக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கும் அனுப்பி உள்ளோம், திட்ட மதிப்பீடு ரூ 85047 கோடிகள் ஆகும்.
இரண்டாம் கட்டம் என்பதின் மொத்த தூரம் 107.55 கிலோ மீட்டர். அதில் மாதவரம் பால் பண்ணை டு சிப்காட் 45.77 கிமீ (பாடி, வளசரவாக்கம், மடிப்பாக்கம் வழியாக) சிஎம்பிடி டு கலங்கரை விளக்கம் 17.12 கிமீ, மாதவரம் பால் பண்ணை டு சோழிங்கநல்லூர் 44.66 கிமீ (பெரம்பூர், லஸ், அடையார், கிழக்கு கடற்கரை சாலை வழியாக) என்னும் வழித்தடங்கள் அமையும்.
இது தவிர ஆற்காடு ரோட்டில் விருகம்பாக்கம், வளசரவாக்கம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சி எம் பி டி டு கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் லைனை வடபழனி, போரூர் மார்க்கமாக பூந்தமல்லி வரை விரிவாக்கும் ஒரு திட்டமும் உள்ளது. இதற்கான வரைவுத் திட்டம் தயாரானதும் இதுவும் மத்திய அரசுக்கு அனுப்பபடும், இதற்கான திட்ட மதிப்பீடு ரூ 3850 கோடிகள் ஆகும் “ என தெரிவித்தார்.
[youtube-feed feed=1]