சென்னை

மிழகத்தின் 10 மாவட்டங்களில் 2009 ஆம் ஆண்டுக்கு  முன்பு பதிவு செய்த ஆவணங்களை விரைவில் இணையம் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்

அனைத்து வீடு, நிலம் போன்ற சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் சார்பதிவாளர் அலுவலக  மூலம் பதிவு செய்யப்படுகிறது.  தமிழகத்தில் இந்த ஆவணங்கள் கடந்த 2009 ஜூலை 6 ஆம் தேதிக்குப் பிறகு ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிடல் அடிப்படையில் பாதுகாக்கப்படுகின்றன.  இந்த ஆவணங்கள் தொலைந்தாலோ அல்லது அவசரமாகத் தேவைப்பட்டாலோ அலுவலகத்தின் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்,

இருப்பினும் 2009க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்படாததால் மீண்டும் கிடைப்பது கடினமாக இருந்து வந்தது.   இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த பழைய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிய ரூ.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த பணியைச் செய்ய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பதியப்பட்டு வருகிறது.

இந்த ஆவணங்களில் அனைத்து பக்கங்களும் ஸ்கேன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.     அத்துடன் எந்த ஒரு பக்கமும் தெளிவாக இல்லை எனில் மீண்டும் ஸ்கேன் செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.  கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறும் இந்த பணியில் பெரம்பலூர் மாவட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதால் அம்மாவட்ட ஆவணங்கள் அளிக்கப்படுகின்றன.

இதைப் போல் மேலும் 10 மாவட்டங்களில் இன்னும் ஓரிரு வாரங்களில் பழைய ஆவணங்கள் ஸ்கேன் செய்யும் பணி முடிவடைய உள்ளது.  எனவே இந்த மாவட்டங்களில் உள்ள 2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்களை இணையம் மூலம் பொது மக்கள்: விரைவில் பெற  முடியும் எனப் பதிவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.