அபுதாபி
சவுதி மற்றும் அமீரகத்தில் பொதுவான டிஜிடல் பணம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாடுகளின் மத்திய வங்கிகள் அறிவித்துள்ளன.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தற்போது பொதுவான பணமாக யூரோ இருந்து வருகிறது. இதனால் ஒரு நாட்டின் பணம் மற்றொரு நாட்டில் செல்லுபடியாகும் நிலை உள்ளது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இந்த ஏற்பாட்டால் எவ்வித குழப்பமும் நிலவுவது இல்லை.
அவ்வகையில் அமீரக மத்திய வங்கி மற்றும் சவுதி மத்திய வங்கி ஆகியவை இணைந்து அபெர் என்னும் ஒரு திட்டத்தை நடத்த உள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையே ஒரு பொதுவான டிஜிடல் பணம் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து இந்த திட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது.
இந்த திட்டம் விரைவில் செயல்பட உள்ளதாகவும் முக்கியமாக எல்லைப் பகுதிகளில் இந்த பொதுவான பணப்புழக்கத்தினால் பணமாற்று முறைகளைத் தவிர்க்க முடியும் எனவும் வங்கிகள் தெரிவித்துள்ளன. இதற்காகப் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.