பெங்களூரு:

ர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.குமாரசாமி பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து துணைமுதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வராவும் பதவி ஏற்றார்.

இந்த பதவி ஏற்பு கோலாகல நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மாயாவதி,  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விதான் சவுதாவில் நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியை காண ஏராளமான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள் கூடியிருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பத்திரிகையாளர்களும் விதான் சவுதாவில் கூடியிருந்தனர்.

இந்த கோலாகல நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலமுதல்வர்கள் கலந்துகொண்டனர்.

ர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மே, 17ல், பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மே, 19ல் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு, முன், அவர் ராஜினாமா செய்தார்.

இதனால், காங்கிரஸ் – – ம.ஜ.த., கூட்டணி சார்பில், ம.ஜ.த., தலைவர், குமாரசாமியை முதல்வராக பதவி ஏற்கும்படி, கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா முதல்வராக, குமாரசாமி, இன்று மாலை பதவியேற்கிறார். துணை முதல்வர்: காங்.,கை சேர்ந்த மூத்த தலைவர், ஜி.பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்கள் பின்னர் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.