டில்லி:

னாதிபதி வேட்பாளர் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந்தேதி யுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில்,  ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.. அறிவிக்க இருக்கும் வேட்பாளரை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பாக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதற்காக பா.ஜ.,வுக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகளை இணைத்து, புதிய அணியை உருவாக்க காங்., முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதையடுத்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லல்லுபிரசாத்,  மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி, திமுகவை சேர்ந்த  கனிமொழி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் சரத் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களுடன்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில்  17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

ஆனால், இந்த கூட்டத்தை, காங்கிரஸ் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் புறக்கணித்தார்.

ஆம் ஆத்மியின் கட்சிக்கு அழைப்பு அனுப்படவில்லை. அக்கட்சியினரும் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, சென்னையில் கருணாநிதி சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்த நாள் விழாவுக்கு பின்னர் மீண்டும்  ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அப்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.