டில்லி

காராஷ்டிர முதல்வராக பதவி ஏற்றுக் கொண்ட சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்ற கூட்டணியாக பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் இருந்த போதிலும் முதல்வர்  பதவி பங்கீடு சர்ச்சையால் கூட்டணி உடைந்தது.  சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது.

 

இடையில் முதல்வராகப் பதவி ஏற்ற தேவேந்திர பட்நாவிஸ் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பதவி விலகினார்.

 

அதன்பிறகு மகாராஷ்டிர முன்னேற்ற முன்னணி என்னும் கூட்டணியை, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உருவாக்கின.  இதையொட்டி ஆளுநர் அழைப்பை ஏற்று இன்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராகப்  பதவி ஏற்றுள்ளார்.

 

பதவி ஏற்பு விழாவில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், திமுக தலைவர் முக ஸ்டாலின், டி ஆர் பாலு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.   காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி  உள்ளார்.