டெல்லி:

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருத்தனமான தாக்குதல் பாஜக ஆட்சியின் முடிவுக்கு தொடக்கமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கூறி உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங் களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள  இஸ்லாமிய பல்கலைக்கழக மான  ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்துது, இதில், 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.  இதில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய  மிருத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி, இது  பாஜக அரசின்  முடிவுக்கு தொடக்கம் என்று கூறி உள்ளார்.