தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து

Must read

புதுடெல்லி:
தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 219 க்கும் அதிகமான இடங்களை பெற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்க உள்ளார். தேர்தலில் தான் தோல்வி அடைந்தாலும், கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.

இதே போன்று 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பெரிய அளவில் வெற்றியை அளித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பதன் மூலம் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகிய இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சோனியா காந்தி, தேர்திலில் வெற்றி பெற்றதற்கு இருவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

More articles

Latest article