சென்னை:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தியிம்  தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு  சோனியாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலை டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சல்தான், வேறு ஒன்றும் இல்லை, வழக்கமான  மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியாவின் மகனும், வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியை இன்று  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து ராகுலிடம் ஸ்டாலின் விசாரித்தார்.