புதுடெல்லி: மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் வரலாறு காணாத போராட்டத்திற்கு, சோனம் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற பாலிவுட் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, இந்தப் போராட்டத்திற்கு தில்ஜித் டோசன்ஜ், ஹர்பஜன் மன், ஜஸ்பிர் ஜஸி, ரெய்டேஷ் தேஷ்முக், ஹன்சால் மேத்தா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

“விவசாயிகளின் கவலைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சம் களையப்பட வேண்டும்” என்றுள்ளார் பிரியங்கா சோப்ரா.

“விவசாயிகள் மனித நாகரீகத்தின் தோற்றுவிப்பாளர்கள். உழவுத்தொழில் உருவான பிறகுதான், உலகில் இதர விஷயங்கள் உண்டாயின. அந்தவகையில், அவர்களே நாகரீகத்தின் தோற்றுவாய்” என்றுள்ளார் சோனம் கபூர்.