புதுடெல்லி: சோனஜ்ஹரியா மின்ஸ் என்ற பழங்குடியினப் பெண்மணி, ஜார்கண்ட் மாநிலத்தின் தும்காவிலுள்ள சிடோ கன்ஹு மர்மு பல்கலைக்கழகத்தின்(எஸ்கேஎம்யூ) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரின் பெயருக்கு அர்த்தம் ‘தங்க நீரூற்று’ என்பதாகும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த பெண்மணி, ஜவஹர்லால் நேரு பல்கலையின் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் அன்ட் சிஸ்டம் சயின்ஸ் -இல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
ஆனால், இவர் தனது பள்ளிப் பருவ காலத்திலிருந்தே ஜாதி ரீதியிலான புறக்கணிப்பை எதிர்கொண்டுள்ளார். ஆனால், அந்தப் புறக்கணிப்பு இவரின் மனஉறுதியை அதிகரித்துள்ளது.
நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் மீது நிகழ்த்தப்படும் சாதிய ரீதியான ஒடுக்கல்கள் மற்றும் புறக்கணிப்புகளை இவர் நன்றாகவே அடையாளம் கண்டார்.
ஒரு செய்திச் சேனலுக்கு இவர் அளித்த நேர்காணலில், கொரோனா காலத்திற்கு பிறகு காத்திருக்கும் சவால்கள் மற்றும் கல்வி உலகில் இவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். இவர், ஆன்லைன் கல்வி என்பது சமூகத்தில் பேதத்தை அதிகரிக்கும் என்ற தனது கருத்தையும் இவர் வெளிப்படுத்தினார்.