டான்டன்: தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தனது தந்தை பரிசளித்த விஸ்கி பாட்டிலை அப்படியே சேமித்துவைத்த ஒரு இளைஞர், அதை தற்போது மொத்தமாக விற்பனை செய்து, வீடு வாங்க திட்டமிட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில்தான் இந்த சுவையான சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த 1992ம் ஆண்டு பிறந்தவர். அவரின் முதல் பிறந்த நாளுக்கு, 18 வருடமான ஒரு விஸ்கியை பரிசளித்தார் அவரின் தந்தை. ஆனால், அதை ஒருபோதும் திறக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்.

இப்படியே, இந்த 2020 வரை, மொத்தம் 28 விஸ்கி பாட்டில்கள் சேர்ந்துவிட்டன. அந்த பாட்டில் விஸ்கி எதுவும் கெடவில்லை என்பது கூடுதல் செய்தி. அவை, தற்போது மொத்தமாக 40,000 பிரிட்டன் பவுண்டுகள் மதிப்பிற்கு விற்பனையாகவுள்ளன.

ஆனால், அவரின் தந்தை, அந்த 28 பாட்டில்களுக்கும் மொத்தமாக செலவிட்டது 5000 பிரிட்டன் பவுண்டுகள் மட்டுமே.

“எனக்கு, எனது தந்தை வழங்கிய விஸ்கி பரிசு, என் வயதுக்கு மீறியது. ஆனால், அதை திறந்துப் பார்க்கவே கூடாது என்ற நிபந்தனையுடனேயே எனக்கு அது பரிசளிக்கப்பட்டது. அந்நிகழ்வு, தற்போ மகிழ்ச்சிகரமான ஒன்றாக முடிந்துள்ளது” என்றார்.