டில்லி

டில்லியில் அமைந்துள்ள அக்பர் சாலையில் சிலர் புதிய பெயர் பலகை வைத்ததால் பரபரப்பு உண்டாகியது.

டில்லியில் அமைந்துள்ளது அக்பர் சாலை.  பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் ஆகியவை இங்குள்ளன.   இந்த சாலை முகலாய மன்னர் அக்பரின் பெயரில் அமைந்துள்ளது.    இந்த சாலையில் யாரோ அடையாளம் தெரியாத சிலர் மகாராணா பிரதாப் சாலை என பெயர்ப்பலகையை மாற்றி வைத்துள்ளனர்

முகலாய மன்னர் ஔரங்கசீப் உடன் 1576 ஆம் வருடம் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பேரரசரான மகாராணா போரிட்டுள்ளார்.   அதனால் அவரது பெயரை டில்லியில் உள்ள ஏதாவது ஒரு சாலைக்கு வைக்குமாறு ஏற்கனவே பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இந்நிலையில் திடீரென பெயர் பலகையில் மாற்றம் வந்ததால் மக்கள் இடையே குழப்பம் உண்டானது.

இதை ஒட்டி இந்த பெயர் பலகை குறித்த தகவல்கள் சமூக வலை தளங்களில் படங்களுடன் பரவ ஆரம்பித்தது.    இதைக் கண்ட  காவல்துறையினர் அக்பர் சாலைக்கு சென்று அந்த பெயர் பலகையை அகற்றி உள்ளனர்.   இவ்வாறு பெயர்பலகையை மாற்றிய ஆட்களை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.