சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை, குமரி மாவட்டத்தில் எக்ஸ்பிரஸ் உள்பட சில ரயில்கள் ரத்து செய்துள்ள தெற்கு ரயில்வே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சேவையையும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவள்ளதாக தெரிவித்து உள்ளது.
திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யபடுகிறது.
வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.06679) வரும் 1, 2, 5, 8, 9 ஆகிய தேதிகளில் 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும்.
கன்னியாகுமரியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும்.
முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் இருந்து மாலை 6. 20 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரம் செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-06428) மார்ச் 1ஆம் தேதி முதல் கொச்சுவேலி வரை இயக்கப்படும்.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் முன்புதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (06433) மார்ச் 2ஆம் தேதி முதல் கொச்சிவேலியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளம் இணைப்பு பணி காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் 9 விரைவு விரைவு ரயில்கள் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 21 வரையும், திருநெல்வேலி செங்கோட்டை இடையே செல்லும் விரைவு ரயில்கள் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரையும், தூத்துக்குடி திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி இடையே செல்லும் விரைவு ரயில் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரைக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் திருநெல்வேலி நாகர்கோவில் விரைவு ரயில் பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரையும், புனலூர் நாகர்கோவில் விரைவு ரயில் பிப்ரவரி 15ம் தேதி அன்றும், நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு ரயில் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் பிப்ரவரி 18ம் தேதியும் மறு மார்க்கமாக பிப்ரவரி 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
38 ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன. திருச்செந்தூர் பாலக்காடு இடையை இயக்கப்படும் விரைவு ரயில் பிப்ரவரி 11ம் தேதி திருநெல்வேலி வரையும், பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை வாஞ்சி மணியாச்சி வரையும் இயக்கப்பட்டு, பின் அங்கிருந்து பாலக்காடு செல்லும். செங்கோட்டை திருநெல்வேலி இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா விரைவு ரயில்கள் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை சேரன்மகாதேவி வரை மட்டுமே இயக்கப்படும்.
திருச்சி திருவனந்தபுரம் அதிவிரைவு விரைவு ரயில் பிப்ரவரி 11 முதல் 16 வரை திருநெல்வேலி வரையும், பிப்ரவரி 17 முதல் 20 வரை கோவில்பட்டி வரை மட்டும் இயக்கப்பட்டு, பின் அங்கிருந்து திருச்சிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.