நியூலாந்திற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் நிகழ்ந்துள்ளன.
* சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த இந்தியக் கேப்டன்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் விராத் கோலி. இருவரும் தலா 75 பவுண்டரிகளை அடித்துள்ளனர்.
* இந்திய அணி இன்றையப் போட்டியில் செய்த சேஸிங், மூன்றாவது பெரிய சேஸிங் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 208 ரன்களையும், இலங்கைக்கு எதிராக 207 ரன்களையும் இதற்கு முன்னர் இந்திய அணி சேஸ் செய்திருந்தது.
* டி-20 போட்டிகளில், அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து (4 முறை) வென்ற அணிகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அடுத்ததாக, 2 முறை வென்ற ஆஸ்திரேலியா இடம்பெறுகிறது.
* ஒரே டி-20 போட்டியில், இரு அணிகளையும் சேர்த்து மொத்தமாக 5 பேட்ஸ்மென்கள் அரைசதம் அடித்தப் போட்டியாக இந்தப் போட்டி மாறியுள்ளது.