சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி, ஆவடி இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) ரத்து செய்யப்படவுள்ளன.

பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து. செய்யப்படுகிறது. மேலும்,  வேளச்சேரி – சென்னை மார்க்கத்தில் இன்று 4 ரயில்கள், நாளை 13 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,   சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மே 17-ஆம் தேதி இரவு 10 மணி முதல், மே 18-ஆம் தேதி காலை 8 மணி வரை நடைபெறவுள்ளன.

இதனால், பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை – வேளச்சேரி, ஆவடி, திருவள்ளூா் இடையே இயங்கும் 24 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும்,  பயணிகளின் வசதிக்காக மே 18-ஆம் தேதி காலை 5 முதல் 8 மணி வரை 30 நிமிஷங்கள் இடைவெளியில் 10 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதே நாளில் ஆவடி – திருவள்ளூா் இடையே காலை 6 முதல் 7.05 மணி வரை 30 நிமிஷங்கள் இடைவெளியில் 3 ரயில்களும், ஆவடியிலிருந்து காலை 5 மணிக்கு அரக்கோணத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.