இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது & 4வது டி-20 ஆட்டங்களுக்கு சூப்பர் ஓவர் முறையில் முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து, டி-20 போட்டிகள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி-20 போட்டியில், சூப்பர் ஓவர் முறையில் 2 போட்டிகளில் வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் கத்தார் அணிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது இந்திய அணி.

இதுவரை, இந்திய அணி விளையாடிய டி-20 போட்டிகளுள் மொத்தம் 3 போட்டிகள் ‘டை’ ஆகியுள்ளன. ஒரு போட்டி ‘பவுல் அவுட்’ முறையிலும், 2 போட்டிகள் சூப்பர் ஓவர் முறையிலும் நடத்தப்பட்டு முடிவுகள் கிடைத்தன. இந்த மூன்றிலும் இந்தியாவே வென்றது.

சூப்பர் ஓவரைப் பொறுத்தவரை, நியூசிலாந்து ராசியில்லாத அணியாக திகழ்கிறது. அந்த அணி பங்கேற்ற மொத்தம் 8 சூப்பர் ஓவர் போட்டிகளில், ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது நியூசிலாந்து அணி.