டெல்லி: சில ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசுக்கு எதிராக நீதித்துறையை திருப்ப முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, அவர்கள்  இந்திய எதிர்ப்புக் குழு கும்பலின் ஒரு பகுதி போல்  செயல்படுகின்றனர் என  விமர்சித்துள்ளார்.

இந்தியா டுடே சார்பில், “நீதிபதிகளின் பொறுப்புக்கூறல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.  இந்த கருத்தரங்கம்,   அதிகாரம் நீதித்துறையை எப்படி பாதிக்கிறது என்ற நிலைக்கு மாறியது.  இதில் பலர் உரையாற்றிய நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜுவும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,  சில  ஓய்வுபெற்ற  நீதிபதிகள்  ஆர்வலர்களாகவும், எதிர்க்கட்சிகளைப் போல நீதித்துறையை அரசாங்கத்திற்கு எதிராக மாற்ற முயற்சிக்கும் இந்திய எதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்த பேசியவர்,  நீதித்துறை நடுநிலையானது, நீதிபதிகள் எந்தக் குழுக்கள் அல்லது அரசியல் சார்புகளின் பகுதியாக இல்லை. இந்திய நீதித்துறை அரசாங்கத்தில்  தலையிட வேண்டும் என்று இவர்கள் எப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பியவர்,   “யாராவது, ராகுல் காந்தியோ அல்லது யாரேனும் இந்திய நீதித்துறை அபகரிக்கப்பட்டுவிட்டது என்றோ அல்லது நாட்டில் ஜனநாயகம் முடிந்துவிட்டது என்றோ… நீதித்துறை இறந்து விட்டது என்று சொன்னால், அதன் அர்த்தம் என்ன?

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகள் ஒரே மொழியைப் பயன்படுத்துவதாக கூறிய அமைச்சர்,  “ஜனநாயகம் கோபத்தில் உள்ளது” மற்றும் “இந்தியாவில் மனித உரிமைகள் இல்லை” போன்ற அறிக்கைகளை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்துகின்றன என்றார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கிண்டல் செய்த சட்ட அமைச்சர், மூத்த காங்கிரஸ் தலைவர் “இந்திய எதிர்ப்பு சக்திகளைப் போலவே அதே மொழியைப் பயன்படுத்துகிறார்” என்று கூறினார். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அழிக்க இந்த ‘துக்டே துக்டே’ கும்பலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால்தான், இந்திய நீதித்துறையை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிப்பதாக அவர்கள் நாளுக்கு நாள் கூற முயல்கின்றனர்.  என்னிடம் இப்போது சில பெயர்கள் உள்ளன, ஒவ்வொரு பெயருக்கும் சக நீதிபதிகள், பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் நிறைய புகார்கள் உள்ளன. நான் அதை பகிரங்கப்படுத்தவில்லை.

ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எதிராக எதிர்மறையான கருத்தை எழுதியிருந்தால், அதை நான் பகிரங்கப்படுத்தக் கூடாது. பொது வாழ்வில் கொஞ்சம் நன்னடத்தை இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.