சோமாலியா:

சோமாலியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சோமாலிய அரசாங்கம் பொது கூட்டங்களுக்கு தடை விதித்ததுடன், அத்தியாவசியமற்ற தொழிலாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுருத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை 500 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதுமட்டுமல்லாமல், 9 பேர் உயிரிழந்துள்ளனர், கொடிய வைரஸ் மீண்டும் அதிகமாக பரவி வருவதை குறிக்கும் வகையில் தொற்று விகிதம் அதிகரித்துள்ளதாக சோமாலியாவின் சுகாதார தகவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உதவ, விழிப்புடன் இருக்கவும் சுகாதார விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் சோமாலிய மக்களை சுகாதார தகவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் எந்த ஒரு பொதுக் கூட்டமோ அல்லது சாதாரண கூட்டமோ அனுமதிக்கப்படாமல் இருக்க, உத்தரவுகளை அமல்படுத்துமாறு சோமாலியாவின் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.