டில்லி:
பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை உயர்வே இதற்கு காரணம். இந்த விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும்’’ என்றார்.