உலகின் மிகப் பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நிறுவனமான சன் எடிசன் திவாலாகும் நிலையில் உள்ளது.
இதன் வீழ்ச்சி மிகத் துரிதமாகவும் கொடுமையாகவும் இருந்தது, நிதியிலுள்ள மிகவும் புகழ்பெற்ற நபர்கள் சிலரையும் அதனுடன் கொண்டு சென்றுவிட்டது.
ஒரு காலத்தில் $ 10 பில்லியன் மதிப்பு இருந்த ஒரு நிறுவனம் இப்போது $ 8 பில்லியன் நீண்ட கால கடனுடன், $ 150 மில்லியனுக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைக்குக் காரணம், ஒரு காலத்தில் மிகவும் சிக்கலாகக் கருதப்பட்ட நிறுவனத்தின் வணிக அமைப்பு, ஒரு சில மாதங்களில் மிக எளிமையாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதாவது அந்நிறுவனத்தினால் போதுமான பணத்தைப் பெற முடியவில்லை.
இந்த எளிய உண்மை, ஜூலையில் சன் எடிசனின் பங்கு 98 சதவிகிதமாகக் குறைந்த போது தான் வால் ஸ்ட்ரீடிற்கு (Wall street) புரியத் தொடங்கியது. விவின்ட்(vivid) என்ற குடியிருப்பு சூரிய நிறுவனத்திற்கு சன் எடிசன் நிறுவனம் 52% பிரீமியம் செலுத்த எண்ணியிருந்தது. முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் விலை உயர்ந்ததாக மட்டுமல்லாமல் குடியிருப்பு சொத்துக்களும் சன் எடிசனுடைய இலாபகரமான வணிக பார்வை பகுதியாக இல்லை என்பதையும் உணைந்தனர். ஆகையால் அவர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்த நிறுவனத்தை பாதாளத்திற்கு தள்ளிய ஒப்பந்தத்தைப் பற்றிய சில வரிகள்:
அக்டோபர் 2014 ல், கிரீன்லைட் காப்பிடலின் ஹெட்ஜ் நிதி பில்லியனர் டேவிட் எயிஹோர்ன் சன் எடிசனை நன்றாக நடந்துவரும் நிதி நுட்ப நிறுவனம் என கூறியுள்ளார். சன் எடிசன் நிறுவனத்திற்கு யீல்ட்கோஸ் எனும் இரண்டு துணை நிறுவனங்கள் உண்டு. அந்நிறுவனம் உருவாக்கும் சூரியத்திட்டங்களுக்கு பயன்படும் வகையில் யீல்ட்கோஸ் அதன் கட்டணத்தை வசூலித்து அதனிடமே மீண்டும் கொடுத்து அதன் பண வரவிற்கு உதவியாக இருந்தது. சன் எடிசனுடைய ஒரு யீல்ட்கோஸின் பெயர் டெர்ராஃபார்ம் பவர். இது அமெரிக்க உள்நாட்டுத் திட்டங்களை கையாளுகிறது மற்றும் டேவிட் டெப்பருக்கு இதன் ஸ்டாக்கில் 10% பங்கு உண்டு. மற்றொரு யீல்ட்கோஸின் பெயர் டெர்ராஃபார்ம் குளோபல். இது சர்வதேச திட்டங்களைக் கையாளுகிறது.
ஆரம்பத்தில் சன் எடிசனுடைய நிலை நன்றாக இருந்ததால் முதலீட்டாளர்கள் குவிந்தனர். அடுத்த வருட ஜூலையில் சன் எடிசனுடைய பங்கு $30 ஆக இருந்த போது விவின்ட் நிறுவனத்தை வாங்கப் போவதாக அறிவித்தது. இந்த விலையுயர்ந்த ஒப்பந்தத்தினால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடந்தனர்.
நவம்பரில், சன் எடிசனின் பங்கு விலை $7 ஆக இருந்ததினால் சில உறுப்பினர்களை வேலைய விடு அனுப்ப நிறுவனம் எண்ணியது. அப்போது இரண்டு குழு உறுப்பினர்கள் இனி அவர்களால் பங்குதாரர்கள் சிறந்த மட்டுமே செய்ய முடியுமென்ற நம்பிக்கை இல்லையென கூறி நிறுவனத்தை விட்டு விலக முடிவெடுத்தனர்.
விவின்ட் ஒப்பந்தம் பற்றி அப்பலூசா சன் எடிசனிடம் சண்டையிடத் தொடங்கியது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற, யீல்ட்கோஸிற்கு சன் எடிசன் டேக்-பே ஒப்பந்தங்களை உருவாக்க ஆரம்பித்தது. சுருக்கமாக, டெர்ராஃபார்ம் பவர் சன் எடிசனுடைய திட்டங்களை ஏற்றுக்கொள்ள வெண்டு இல்லையெனில் கட்டணத் தொகை செலுத்த வேண்டும். இது அப்பலூசாவிற்கு பொருத்தமாக இல்லை.
ஜனவரி மாதம் அப்பலூசா வழக்கு தாக்கல் செய்த போது, பங்கு விலை $ 2.81 ஆக இருந்தது. இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த விவின்ட் மார்ச் மாத தொடக்கத்தில் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற சன் எடிசனிடம் போதுமான அளாவு பணமில்லை எனவும் அதன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் விவின்ட் நிறுவனம் கூறியது. இதற்கிடையில் சன் எடிசன் தன்னுடைய எல்லா ஒப்பந்தகளையும் பின்வாங்கத் தொடங்கியிருந்தது.
இதன்பின், செவ்வாய் அன்று டெர்ராஃபார்ம் குளோபல் சன் எடிசன் திவாலாகும் நிலையிலுள்ளது என அறிவித்தது. இதனால் சன் எடிசனுடைய பங்கு விலை $ 0.50 கீழே சரிந்தது. புதன் கிழமை அன்று, சன் எடிசனுடைய இரண்டு துணை நிறுவனங்களாகிய டெர்ராஃபார்ம் பவர் மற்றும் டெர்ராஃபார்ம் குளோபல் ஆகியவையின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் வெப்பெல்ஸ் தனது பதவியிலிருந்து விலகுவார்.