டெல்லி: பிப்வரி 20, 2024 வரை, சுமார் 97.62 சதவிகித ரூ. 2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2016-ல் ரூ.2000-ஐ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 2023 மே மாதம் 19ந்தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவின் அதிக மதிப்புள்ள நாணயமான ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படும் என அறிவித்தது. அதற்கான கெடுவாக 2023 செப்டம்பர் 30ந்தேதி வரை என அறிவித்தது. அதாவத, : 2,000 ரூபாய் நோட்டுகளை கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றது. அவற்றை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வேறு நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. பிறகு இந்த கால அவகாசம் அக்டோபர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்பிறகு குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி மார்ச் 1ந்தேதி அன்று (2024) ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்இ 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட நாளில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 29-ந் தேதி நிலவரப்படி, ரூ.8 ஆயிரத்து 470 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்து சேரவில்லை. அதாவது, 97.62 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன. . மீதமுள்ள நோட்டுகளை வைத்துள்ளவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி மாற்றிக்கொள்ளலாம். அல்லது, எந்த தபால் நிலையத்திலும் ‘இந்தியா போஸ்ட்’ மூலமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பி, தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.