சபரிமலை
இதுவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 26-ந்தேதி மண்டல சீசன் நிறைவு பெற்றது. மண்டல சீசனில் மட்டும் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
தற்போதைய மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலையில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த டிசம்பர் 31-ந்தேதி முதல் தினசரி 1 லட்சம் பக்தர்கள் சராசரியாக தரிசனம் செய்து வருகிறார்கள் எனவே மண்டல சீசன் முதல் கடந்த 49 நாட்களில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளது,
தற்போது சபரிமலை சன்னிதானம் 24 மணி நேரமும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது இந்த. கூட்ட நெரிசல் காரணமாக சாமி தரிசனம் செய்ய 8 முதல் 10 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.