டெல்லி

ற்போது டெல்லியில் கனமழை பெய்வதால் இதுவரை 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சுமார் 88 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பு 1936 ஆம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தெற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் சந்தோஷ் குமார்யாதவ் (19), சந்தோஷ் (38) எனத்தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

மேலும் வடமேற்கு டெல்லியின் பட்லி பகுதியில் இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிய சுரங்கப்பாதையில் மூழ்கி இறந்தனர்., ஜெய்த்பூர் பகுதியை சேர்ந்த திக்விஜய் குமார் சவுத்ரி என்ற 60 வயது முதியவர் ஓக்லா பகுதியில் தண்ணீர் தேங்கிய பாதாளப் பாதையில் வாகனத்துடன் சிக்கி உயிரிழந்தார்.

இதுவரை டெல்லியில் கனமழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் மழையின் காரணமாக 5 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மழையின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது.