ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓடும் ரெயிலில் பயணம் செய்த இரு பயணிகள் இடையே.  தும்மியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோ தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தொறறு இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து இருந்து மற்றவருக்குப் பரவும் என்றும், நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகிய வற்றாலும் பரவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்,  கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பல நாடுகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் எதிரெதிரே இருக்கையில் அமர்ந்துள்ள பயணிகளில் ஒருவர் தும்மியதால்  வாக்குவாதம் ஏற்பட்டது.

ஓடும் ரயிலில் ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தை அருகில் இருந்த செய்தியாளர் ஒருவர்  வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது…

[youtube-feed feed=1]