சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்த தகுதியானோருக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

திமுக 2021ம் ஆண்டு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி,  அண்ணா பிறந்தநாளையொட்டி, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   இந்த திட்டத்தில், மொத்தமாக 2 கட்டங்களையும் சேர்த்து ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் பயனடைந்துள்ளனர். திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியானவர்களுக்கு நவ.25ம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. . தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டத்திலுள்ள பயனாளிகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக ரூ.1,000 செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது.