அலஸ்கா: அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் விட்டை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடலில் பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்காவில், தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது மக்களிடையே பீதியை உருவாக்கி உள்ளது.