downloada
புகழ்பெற்ற குரு ஒருவர் மன்னனின் அரண்மனைக்கு வந்தார். அப்போது வியாபாரி ஒருவனிடம் நூறு பொற்காசுகளை ஒருவன் திருடிய வழக்கு நடந்துகொண்டிருந்தது.
விசாரித்த மன்னன், திருடனுக்கு இரண்டு மாதங்கள் சிறை தண்டனை என்று தீர்ப்பளித்தான். இதைப் பார்த்த குரு,  “மன்னா… திருடனுக்கு இரு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது சரிதான். ஆதே நேரம், வியாபாரிக்கு இரு வருடங்கள் சிறைத்தண்டனை அளிக்க வேண்டும்” என்றார்.
மன்னர் ஆச்சரியத்தோடு, “ஏன்” என்றார்.
“நான் நாடு முழுதும் சுற்றி வந்தேன். விவசாயியிடம் ஒரு கிலோ தக்காளியை ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கி, மக்களிடம் நூறு வெள்ளிக்காசுக்கு விற்கிறான் இந்த வியாபாரி. ஆகவேதான் அவனுக்கும் தண்டனை அளிக்க வேண்டும் என்கிறேன்”  என்றார்.
குருவின் வார்த்தைையில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட அரசன், அப்படியே வியாபாரிக்கு தண்டனை அளித்ததோடு, ” இனி நீங்களே நீதிபதியாக இருந்து தீர்ப்பளியுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டான்.