லக்னோ: உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நாளை சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராகுகிறார். இதை மாநில காங்கிரஸ் தலைவர் உறுதிபடுத்தி உள்ளார்.
பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா குறித்து உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காநிதி, அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து. உ.பி. மாநில பா.ஜ.க. பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகடந்த 5 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், 2024ம் ஆண்டுஎ பிப்ரவரி 20-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ராகுலின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஜாமின் வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நாளை ஜூலை 26-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நாளை விசாரணையின்போது வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியிடம் வாக்குமூலம் பெறும் வகையில், அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டள்ளது. இதையேற்று, ராகுல்காந்தி நாளை சுல்தான்பூர் கோர்ட்டில் ஆஜராகிறார்.
இதை காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ராணா இன்று தெரிவித்தார். காலை 9 மணிக்கு ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் சுல்தான்பூர் சென்று கோர்ட்டில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராகுல் வருகையையொட்டி சுல்தான்பூரில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.