பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம், ‘ஹிப் ஹாப் தமிழன்’.
நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் ஆதி. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘சிவக்குமாரின் சபதம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஆதியே இயக்கி இருக்கிறார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு, இவர் இயக்கும் இரண்டாவது படம்,
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
We are very happy to present the first look of #SivakumarinSabadham starring HipHop Aadhi 💥
Directed by @hiphoptamizha 🎥#HHTEnt pic.twitter.com/qIrxN0c8TJ
— Sathya Jyothi Films (@SathyaJyothi) February 10, 2021