”சர்ஜிகல் ஸ்டிரைக்” முடிந்து ஒரு வருடம் ஆகிறது : எல்லையில் நிலைமை என்ன?

Must read

ம்மு காஷ்மீர்

”சர்ஜிகல் ஸ்டிரைக்” என்னும் தீவிரவாதிகள் அழிப்பு தாக்குதல் நடந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் எல்லையில் தற்போதைய நிலை பற்றிய ஒரு செய்திக் குறிப்பு இதோ :

கடந்த செப்டம்பர் இறுதியில் சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படும் தீவிரவாதிகள் அழிப்பு தாக்குதல் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும்,  பாக் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளிலும் இந்திய ராணுவம் நிகழ்த்தியது.  அதில் 110 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அந்த தாக்குதல் முடிந்து இந்த  ஒரு வருடத்துக்குள் சுமார் 178 தீவிரவாதிகள்  எல்லைப் பகுதியிலும், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியிலும்  கொல்லப் பட்டுள்ளனர்.    இவர்களில் 31 பேர் சென்ற வருடம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் கொல்லப்பட்டனர்.  மீதமுள்ளோர் இந்த வருடம் கொல்லப்பட்டனர்.

இது குறித்து ஒரு ராணுவ அதிகாரி,  “தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைப்பு தான்.   சர்ஜிகல் ஸ்டிரைக் முடிந்ததும் தீவிர வாதம் அழிக்கப்பட்டதாகக் கூறி பல வீரர்கள் அங்கிருந்து திரும்ப அழைக்கப்பட்டனர்.  அந்த செய்தி பரவியதால் தங்களை தடுக்க யாரும் இல்லை என எண்ணி தீவிரவாதிகள் தங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

அது மட்டும் இன்றி எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளைப் போல ராணுவ வீரர்களும் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர்.  இது தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததினாலும், அவர்களின் யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கைகளாலும் ஏற்பட்டுள்ளது.   இதுவரை 228 யுத்த நிறுத்த மீறல் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர்.

ஆனால் இத்தனை தாக்குதல்களையும் தாண்டி தீவிரவாத தாக்குதல்களை பெருமளவில் நமது ராணுவம் குறைத்துள்ளது.  சர்ஜிகல் ஸ்டிரைக் முடிந்து ஒரு வருடம் ஆகிறது.   இப்போது தான் தீவிரவாதத் தாக்குதல்கள் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article