சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிரித்து போனஸாக வழங்கப்படும் அந்நாட்டு நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் உரையின் போது இதை அவர் அறிவித்தார். சிறப்பு நிகழ்வுகளின் போது வழங்கப்படும் போனஸ் பரிசாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சியில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பங்கு அளிக்கப்படும் என்ற அரசின் நீண்ட நாள் உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ன.
மக்கள் வருமானத்தின் அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படவுள்ளது. 20.7 லட்சம் பேர் இந்த போனஸ் பெறவுள்ளனர். மேலும் இந்த உபரி தொகையில் 500 கோடி சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரெயில் கட்டமைப்பு பணிகளுக்கும், 200 கோடி சிங்கப்பூர் டார் முதியவர்கள் பாதுகாப்பு, இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.