ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபெர் பாட்மின்டன் தொடரில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த சிந்து, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார்.

டென்மார்க்கில் அக்டோபர் 3 முதல் 11ம் தேதிவரை நடைபெறவுள்ளது தாமஸ் உபெர் பாட்மின்டன் கோப்பைத் தொடர். குடும்ப விழா காரணமாக, இத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று உலக சாம்பியன் சிந்துவின் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அத்தொடரில் பங்கேற்க, சிந்து சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய பாட்மின்டன் சங்கத் தலைவர் ஹிமந்தா பிஸ்வா கூறியதாவது, “இத்தொடரின் அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது மற்றும் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறியதால், தனது குடும்ப விழாவை முன்னதாகவே நடத்தி முடித்து, இத்தொடரில் பங்கேற்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்” என்றார்.

[youtube-feed feed=1]