கோலாலம்பூர்: தற்போது மலேசிய நாட்டில் நடந்துவரும் மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் முதல் சுற்றைக் கடந்துள்ளனர்.
இந்தியாவின் சிந்து தனக்கான முதல் சுற்றில் ரஷ்யாவின் எவ்ஜெனியாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டி மொத்தம் 35 நிமிடங்களே நீடித்தது. இப்போட்டியில் 21-15 மற்றும் 21-13 என்ற நேர் செட்களில் வென்றார்.
மற்றொரு மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், இந்தியாவின் சாய்னா நேவால், பெல்ஜியத்தைச் சேர்ந்த லியானே டானை, 21-15 மற்றும் 12-17 ஆகிய நேர் செட்களில் வீழ்த்தினார்.
ஆனால், ஆண்கள் ஒற்றையர் போட்டிகளில், இந்தியாவின் ஸ்ரீகாந்த், மற்றும் சாய் பிரனீத் முறையே சீனதைபே மற்றும் மென்மார்க் வீரர்களிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தனர்.