பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன் தொடரில் பெரிதாக சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிந்து, காலிறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மின்டன் மகளின் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கணையான தைவான் நாட்டின் தை டிஜு இங்கை சந்தித்தார்.
இப்போட்டியில் முதல் செட்டை 16-21 என்று பறிகொடுத்த சிந்து, இரண்டாவது டெஸ்டில் 26-24 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். எனவே, வெற்றியை நிர்ணயிப்பதற்கான மூன்றாவது செட்டிற்கு ஆட்டம் சென்றது.
ஆனால், இந்த செட்டில் சிந்துவால் போராட முடியவில்லை. இறுதியாக 17-21 என்ற கணக்கில் தைவான் வீராங்கணையிடம் வீழ்ந்து, கோப்பையையும் இழந்தார்.
அதேசமயம், ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் சிராக் ஷெட்டி – ரான்கிரெட்டி இணை, டென்மார்க் இரட்டையர் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.