ஏஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரேயா இணைந்து தயாரிக்கும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட் நிறுவனம் வழங்குகிறது.

நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருடன் அபிஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரேயா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா குமார், பானுப்பிரியா மற்றும் இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஷால் வெங்கட் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் ரதன் இசையமைக்கிறார்.

தற்போது சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .நடிகர் தனுஷ், சில நேரங்களில் சில மனிதர்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.