ண்டன்

ண்டனில் தீவிரவாதிகளின் தாக்குதலினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதில் பாதிப்பு அடைந்து வீடு செல்ல முடியாமல் தவித்தோருக்கு சீக்கிய குருத்வாரா அடைக்கலம் கொடுத்துள்ளது

நேற்று லண்டன் பாலத்தில் வேன் ஏற்றியும், பொரோ மார்க்கெட்டில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியும் தீவிரவாதிகள் வெறியாட்டம் செய்தனர்.

இதனால் அனைத்து சாலை, ரெயில் போக்குவரத்துகள் அடியோடு நிறுத்தப்பட்டன.  இதனால் மக்கள் தங்களின் இருப்பிடத்துக்கு திரும்ப முடியாமல் அவதியுற்றனர்.

அதனால் உள்ளூர்வாசிகள் தவிக்கும் மக்களுக்கு  அங்கங்கு அடைக்கலம் அளித்தனர்.

சீக்கிய மக்கள் தங்களுடைய குருத்வாராவில் தவிக்கும் மக்களுக்கு தங்க இடமும், உணவும் அளித்துள்ளனர்.

இதை அங்கு உள்ள ஊடகங்களில் தெரிவித்து உதவி செய்துள்ளார் லண்டனை சேர்ந்த பல்தீப் சிங்

[youtube-feed feed=1]