ண்டன்

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் 37 வயதான ரவ்வித் சிங்.   இவர் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்து வருகிறார்.    அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர் தன்மன்ஜீத் சிங்.   இவர் தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   இவரை சந்திக்க ரவ்வித் சிங் பாராளுமன்றம் சென்றுள்ளார்.

அப்போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் இவர் வாயிலில் வரிசையில் நின்றுள்ளார்.  திடீரென வேகமாக ஓடி வந்த ஒருவர்  ரவ்வீத் சிங்கை சரமாறியாக தாக்கி உள்ளார்.  அத்துடன் இஸ்லாமியர்களே நாட்டை விட்டு திரும்பி செல்லுங்கள் எனக் கூறியவாறு அவருடைய தலைப்பாகையை அகற்ற முயன்றுள்ளார்.

அங்கு கூட்டம் கூடவே தாக்கிய நபர் தப்பி ஓடி விட்டார்.  இது குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.   இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜித் சிங் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதற்கு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துளார்.

இதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

[youtube-feed feed=1]