இன்று “பங்குனி உத்திரம்”
12-வது மாதம் பங்குனியும்,12-வது நட்சத்திரம் உத்திரமும் சேரும் நாள் பங்குனி உத்திரம் இந்த நாளில் சந்திரன் முழு நிலவாக அற்புதமாகக் காட்சியளிப்பார்.
*சிவன் – பார்வதி திருமணம் நடந்தது பங்குனி உத்திரத்தில்.
*முருகன் – தெய்வானை கல்யாணம் நடந்தது இத்திருநாளில்தான்.
*ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன.
*.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
*மகாலெஷ்மி அவதார நாள் பங்குனி உத்திரம் தான்.
*மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான்.
* இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்குனி உத்திரத்தன்றுதான்.
*மன்மதன் பிறந்தது இந்த நாளில்தான்.
*மணிகண்டனாகிய,ஐயப்பன் பிறந்தது இதே நாள் தான்.
*அர்ஜுனன் பிறந்தது இதே நாளே.
இந்த நாளில் முருகனை நினைத்து விரதமிருந்தால் நமக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். திருமணத்தடை நீங்கும்.அளப்பறியா செல்வங்கள் கிடைக்கும்.