காட்டுமன்னார்கோவில் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி உடனாய அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில், காட்டுமன்னார்கோவில்.
ஸ்ரீமந் நாத முனிகள், ஸ்ரீமந் ஆளவந்தார் ஆகியோர்களின் திருஅவதாரத் திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
மதங்க மாமுனிவருக்குப் பெருமாள் சேவை சாதித்து அருளிய இடமாதலால் மதங்காஸ்ரமம் என்னும் பெயர் பெற்ற திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.

பெருமாளுக்கு வலது பக்கம் தாயாரும், இருமருங்கிலும் ஆசாரியார்களான ஸ்ரீமந் நாத முனிகளும், ஸ்ரீ ஆளவந்தாரும், முன் மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமந் மணவாள மாமுனிகளும், ஆழ்வார்களும் வைஷ்ணவ சம்பிரதாயப்படி சேவை சாதிக்குமாறு சந்நிதிகள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
கண்டராதித்த சோழன் கால கல்வெட்டில் வீரநாராயண விண்ணகர் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.

ஜடாவர்ம சுர்தரபாண்டியன் பத்தாம் ஆண்டு கல்வெட்டில் பெருமாளின் பெயர் மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
கிருஷ்ணதேவராயர் கால கல்வெட்டில் அழகிய மன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
பாஞ்சராத்ர ஆகம தென்கலை சம்பிரதாயத் திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம் காட்டுமன்னார்கோயில்.
Patrikai.com official YouTube Channel