கனடா:
டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வாட்ஸ் அப்புக்கு பதிலாக டுவிட்டரை பயன்படுத்துங்கள் என்று தன்னை பின்தொடர்வோரிடம் தெரிவித்து இருந்தார்.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது 200 கோடி பயனர்களுக்கு புதிய விதிமுறையை அறிவித்திருக்கிறது, இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் தங்கள் சேவையை தொடரமுடியாத என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், தனது ட்விட்டரில் ‘யூஸ் சிக்னல்’ என்ற இரு வார்த்தைகளை அவர் பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த முதலீட்டாளர்கள் எலான் மஸ்க் டுவிட்டரை சரியாக புரிந்து கொள்ளாமல், SIGL பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது