ஆபத்தான சிக்னல் செயலி:
இந்த என்க்ரிப்டெட் செயலி இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர்களை தொடர்புக்கொள்ள உதவி வருகிறது.
signal app safety - featured
இந்தியாவில் உள்ள ஒரு பயங்கரவாத சந்தேக நபர்கள் குழு, அது  இஸ்லாமிய அரசால்(ஐ.எஸ்.ஐ.எஸ்) ஈர்க்கப்பட்டு அமெரிக்க விசில்ப்ளோயர் எட்வார்ட் ஸ்னோவ்டென்னை பின்பற்றி மறைகுறியாக்கப்பட்ட தொடர்பு கருவி சிக்னலை கொண்டு தொடர்பில் இருக்கத் திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் (என்ஐஏ) விசாரணையில்  வெளிப்படுத்தப்பட்டள்ளது.
மறைகுறியாக்கப்பட்ட தொடர்பை வழக்கமாக பயன்படுத்தியதாக அறியப்படுகிற ஸ்நோவ்டென், தேசிய பாதுகாப்பு அமைப்பின் உலகளாவிய கண்காணிப்பு திட்டங்கள் தொடர்பான இரகசியத் தகவல்களோடு அமெரிக்காவை விட்டு சென்ற பின்னர் அவரது நண்பர்களுடன் தொடர்பு கொள்ள சிக்னல் செயலியை நம்பியிருந்தார்.

snowden
“விசில் ப்ளொயர் (தகவல் தெரிவிப்பவர்)” ஸ்னோடன்

இந்தியாவில் ஐஎஸ் பரவுவதை ஆய்வு செய்யும் என்.ஐ.ஏ., சிரியா சார்ந்த கையாளர்கள் இதேப் போல் ஒரு மறைகுறியாக்கும் தொழில்நுட்பத்தை தொடர்புகொள்ள பயன்படுத்தியது கண்டறியப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்தியாவில் ஒரு ஐஎஸ் உறுப்பினரான அபு அனஸ்க்கு சிக்னல் வரிசையில் ஒரு இரகசியத் தொடர்பு செயலியை உருவாக்கும் பணி வழங்கப்பட்டது என்று அவர்கள் கூறினர். டெலிகிராம் என்ற மற்றொரு மறைகுறியாக்கப்பட்ட உரையாடல் திட்டத்தை ஐஎஸ் உறுப்பினர்கள் பயன்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.
ISIS Al-Qaeda Militants Fighting Syrian Civil War
“வாட்ஸப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற மற்ற உரையாடல் செயலிகள் பாதுகாப்பு முகவர்களால் எளிதாக கண்காணிக்கப்படுவதால் நான் ஓபன் சோர்ஸ் மூலம் சிக்னல் கண்டுபிடித்தேன். பாதுகாப்பு முகவர்களின் கண்காணிப்பு வரம்பின் கீழ் சிக்னல் இல்லை,” என்று அனஸ் விசாரணை நடத்தியவர்களிடம் கூறியதாக ஒரு அதிகாரி கூறினார்.
கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றுள்ள அனஸ், ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
செயலி கடை (ப்ளே ஸ்டோர்)களில் “சிக்னல்  செயலி “இலவச பதிவிறக்கமாக கிடைக்கிறது என்பதையும் வாட்ஸப்பின் சமீபத்திய வடிவம் உரையாடல்களை குறியாக்கம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .
மும்பை அடிப்படையாகக் கொண்ட தலைமையதிகாரி  முதாபீர் ஷேக், மற்ற கணினி நிபுணர்கள் இருந்த ஐஎஸ் குழுவிடம் “அவர்கள் ரகசியமாக பேச அண்ட்ராய்டு மொபைல்களின் பாதுகாப்பிற்கு ஜாவா மென்பொருள்” உருவாக்கும் பொறுப்பைக் கொடுத்தார், என்று அதிகாரி கூறினார்.
என்.ஐ.ஏ படி குழுவைத் தலைமை தாங்குவதாக கருதப்படும் அனஸ், மேலும், சிரியாவில் உள்ள ஐஎஸ்- ல் சேருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் ஜப்பான் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அங்கிருந்து துருக்கி பறக்கப் போவதாகவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகின்றது. “ஜப்பானில் விசா செயலாக்கம் செய்வது எளிதாக உள்ளது என்று அவர் கருதுகிறார்,” என்று அனஸை விசாரித்த அதிகாரி கூறினார்.
கர்நாடகாவிலுள்ள பட்கல் என்ற இடத்திலிருந்து வந்து 2008 ல் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் இந்திய முஜாஹிதீன் தளபதி ஷாபி அர்மார் தான் இந்தியாவில் உள்ள ஐஎஸ் மாட்யூள் அமைக்க காரணகர்தாவாக இருந்ததாக விசாரணைகள் வெளியிடுகிறது. சிரியாவில் இருந்து அவர் இயக்குவதாகவும் ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதிக்கு தனது விசுவாசத்தை உறுதி அளித்திருக்கிறார் எனவும் நம்பப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம், ஐஎஸ் தொடர்பான மற்றொரு வழக்கை என்.ஐ.ஏ.விடம் விசாரணைக்கு மாற்றுமாறு கட்டளையிட்டுள்ளது. ஆரம்பத்தில முதல் தகவல் அறிக்கையை தில்லி போலீஸ் சிறப்பு குழு விசாரணை  செய்து ஹரித்வாரில் ஐந்து பேரை கைது செய்துள்ளது.
இந்த அனைத்து விஷயங்களிலும் உள்ள சதி பொதுவானது என்றும் என்.ஐ.ஏ விசாரிக்கும் பெரிய மாட்யூளோடு இது இணைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் நம்புகிறது. ஐஎஸ் ஆல் ஈர்க்கப்பட்ட மாட்யூளை இந்தியாவில் அமைத்ததற்கு 19 பேரை கைது செய்துள்ளது நிறுவனம்.
 
 
This taxi app will work without internet
 
 
 
 
Fashion & lifestyle startup Styletag launches mobile app