சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.
நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா – நாக சைத்தன்யா இருவரும். அதோடு நாக சைத்தன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக வழங்க முன்வந்த நிலையில் அதை சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் சமந்தா கணவரை பிரிந்ததையடுத்து, ட்விட்டரில் மறைமுக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். அதில், “பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் ஒன்று… ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சித்தார்த்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் சமந்தா. அந்த உறவு முடிவுக்கு வரவே பின்னர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Actor_Siddharth/status/1444303130175311878