
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் ஒரு படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.
கொரோனா முதல் அலையில் சென்னை சாலிகிராமத்தில் மருத்துவமனை நடத்திவந்த சித்த மருத்துவர் வீரபாபு பிரபலமடைந்தார். சித்த மருத்துவத்தில் கொரோனா நோயாளிகளை இவர் குணப்படுத்தியதால் தமிழக அளவில் இவரது பெயர் பரவியது.
தற்போது அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி, நடிக்கிறார். படத்துக்கு முடக்கருத்தான் என பெயரிட்டுள்ளார்.
இந்தப் படத்தை வயல் மூவிஸ் தயாரிக்க, அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் சிற்பி – பாடலாசிரியர் பழனிபாரதி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
[youtube-feed feed=1]